கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார்..
தமிழக சட்டசபையின் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று பல்வேறு அறிவிப்புகளை மு க ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார்.. அதனை தொடர்ந்து தற்போது கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைகள் வரை அடகு வைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்..
மேலும் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகை கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்றும், இதன் மூலம் 6,000 கோடி அளவிற்கான நகை கடன் தள்ளுபடி செய்வதாக தெரிவித்துள்ளார்..