தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும் என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்றாக தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதில் தமிழகத்தில் புதிதாக 10 காவல் நிலையங்கள், 4 தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள். 700 சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கான அரசு ஆணை விரைவில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.