தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 6000கோடி அளவுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 110 விதியின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் 6,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் தள்ளுபடியை பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை வைத்து கடன் வைத்திருக்கக்கூடிய விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் சொல்லியிருக்கிறார். உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த நகை கடன் தள்ளுபடி இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்.