Categories
மாநில செய்திகள்

ஐய்யயோ…! இவர்களுக்கு கடன் தள்ளுபடி இல்லை…. முதல்வர் சொன்ன ஷாக்  தகவல்….!! 

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத்தில் கடன் உள்ள யாருக்கெல்லாம் தள்ளுபடி செய்யப்படும் என விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையின் கடைசி நாளான இன்று 110வீதியின் கீழ் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை முக.ஸ்டாலின் அறிவித்தார். கூட்டுறவு வங்கிகளில் 5பவுனுக்குட்பட்டு கடன் வைத்துள்ளவர்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் இந்த அறிவிப்பை தேர்தல் அறிக்கையிலே சொல்லி இருந்தார். இதனை நிறைவேற்றும் வகையில் தற்போது ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் ஒரு சில இடங்களில் முறைகேடாக சிலர் நகை கடன் பெற்று உள்ளார்கள். ஏற்கனவே ஒரே குடும்பத்தில் 3 பேர், 4 பேர் எல்லாம் வாங்கி இருக்கிறார்கள். இதை எல்லாம் களையப்படும், உண்மையான பட்டியல் யார் யார் என்ற விவரங்களை சேர்க்கப்பட்டிருக்கிறது. கூட்டுறவுத்துறை சார்பில் யாருக்கெல்லாம் கடன் தள்ளுபடி என்ற விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று முதல் அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

6,000 கோடி ரூபாய் அளவிற்கு இந்த கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 31ஆம் தேதி வரை  நகை கடன் வைத்தவர்களுக்கு மட்டும் தள்ளுபடி என சொல்லப்பட்டுள்ளது. 2021 மார்ச் 31ஆம் தேதி வரை நகை வைத்தவர்களுக்கு மட்டும்தான் இந்த தள்ளுபடி உண்டு. அதற்குப் பின்னால் வந்தவர்களுக்கு தகுதி கிடையாது.

ஒரே குடும்பத்தில் மூன்று,  நான்கு பேர் வாங்கியில் கடன் வாங்கி இருந்தால் தள்ளுபடி கிடையாது. இதையெல்லாம் ஆய்வு செய்து ஒரு விரிவான பட்டியலை ஓரிரு நாட்களில் கூட்டுறவுத் துறை சார்பாக வெளியிடப்படும் என்று சொல்லியுள்ளார். ஒரே குடும்பத்தில் பல பேர் வாங்கி இருந்தால் அவர்களுக்கு கூட்டுறவுக் கடன் தள்ளுபடி கிடையாது எனவும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

Categories

Tech |