தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பொதுக் கிணறு அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குளம், குட்டை தூர்வாருதல், மண் சாலை சீர் செய்யும் பணிகளுடன், சிறிய வேளாண்மை பணிகளும் இணைக்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு அதிக நிதி ஒதுக்குவதால் ஊராட்சியில் கான்கிரீட் தளம், பேவர் பிளாக் தளம், கான்கிரீட் தடுப்பணை, தனிநபர் மற்றும் சமுதாய உறிஞ்சு குழிகள் அமைத்தல், மரக்கன்று நடுதல் போன்ற பணிகள் சேர்க்கப்பட்டது.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூறியபோது பொது கிணறு மற்றும் தனிநபர் கிணறு அமைக்கவும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. எனவே தனி நபர் கிணறு அமைப்பதற்கு 7 லட்சம் ரூபாய் வரையிலும், பொது கிணறு அமைப்பதற்கு 12 லட்சம் ரூபாய் வரையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கதிர் அடிக்கும் தளம், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம் அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.