Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “தேவையான பண உதவி கிடைக்கும்”… உடல் சோர்வு உண்டாகலாம்..!!

எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மேஷராசி அன்பர்களே…!! இன்று பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் அடையும் நாளாக  இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாள் கனவு இன்று நனவாகும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமாகும். தேவையான பண உதவி கிடைக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல் சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. இன்று குடும்பத்தில் அனைவரின் பேச்சுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். இன்று ஓரளவு சிறப்பை கொடுக்கும் நாளாக இருக்கும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். ஆசிரியரின் சொல்படி நடந்து கொள்வார்கள். சக மாணவர்களிடம் மட்டும் கவனமாக  நடந்து கொள்ளுங்கள். அது போதும். விளையாடும் போது கவனமாக நடந்து கொள்ளுங்கள்விளையாடுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது வெள்ளை நிற ஆடையோ  அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் சூரிய நமஸ்காரம் செய்து இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகும். வெற்றி பெறும் நாளாக  இன்று இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |