தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணம் அமைந்துள்ளது. அந்த மாகாணத்தின் தோர் கார் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கனமழையினால் 5 வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்துள்ளன. குறிப்பாக கராச்சி, சிந்த் போன்ற மாகாணங்களின் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
இதனை பாகிஸ்தான் வானிலை ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. குறிப்பாக தர்பார்க்கர், படின், தட்டா, உமர்கோட், சங்கார், மீர்புர்க்காஸ், ஷாகீத் பெனாசிராபாத், ஜாம்சோரோ, கைர்பூர் மற்றும் ஐதராபாத் போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.