Categories
மாநில செய்திகள்

BREAKING: சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதா… நிறைவேற்றம்….!!!

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவை மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் இறுதிநாளான இன்று நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்ட மசோதாவை முதல்வர் முக ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்த பின்பு, பேசிய அவர்,  நீட் ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவினர் அறிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் நீட் தேர்வு காரணமாக பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையும் கனவும் தகர்க்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு என்பது சமத்துவமின்மையாக உள்ளது.

மேலும், இந்த தேர்வு சிறப்பு பயிற்சி பெறக்கூடிய சமூகத்தின், பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கிறது என்று தெரிவித்தார். இந்த சட்ட மசோதா தாக்கல் செய்வதற்கு முன்பாக முதல்வர் ஸ்டாலின் ஈபிஎஸ் இடையே  விவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பிறகு சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Categories

Tech |