Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பவானி ஆற்றில் மூழ்கி 8 வயது சிறுவன் பலி…. கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்….!!!!

கோபிசெட்டிபாளையம், பச்சைமலை தென்றல் நகரில், விக்னேஷ்- நதியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு புவனேஸ்வரி, ஸ்ரீமதி என்ற இரண்டு மகள்களும், விஜய் என்ற ஒரு மகனும் உள்ளனர். விஜய் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். இதையடுத்து நேற்று மதியம் விக்னேஷ்- நதியா தம்பதியினர் தன் மகனை பவானி ஆற்றுக்கு துணி துவைப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது விக்னேஷ் மற்றும் நதியா தம்பதியினர் துணிகளை துவைத்துக் கொண்டிருந்த நிலையில், அவர்களுடைய மகன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தான். குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென தண்ணீரில் மூழ்கி காணாமல் போனான். இதை பார்த்த பெற்றோர் தன் மகனை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால்ஆற்றில்  அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் அவர்களால் தன் மகனை காப்பாற்ற இயலவில்லை. இதைப் பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஆனால் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் அவர்களாலும் அச்சிறுவனை காப்பாற்ற இயலவில்லை. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். அதன் பிறகு  அச்சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு ஒரு மணி நேரம் கழித்து  சிறுவன் உடல் பிணமாக மீட்டனர். தன் மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதார்கள். இச்சம்பவம் பற்றி  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |