Categories
தேசிய செய்திகள்

மறுத்த மத்திய அரசு… “அப்போ நாங்களே உத்தரவு பிறப்பிக்குறோம்”… சுப்ரீம் கோர்ட் அதிரடி!!

பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததால் மனுதாரர்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெகாசஸ் உளவு மூலமாக  பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள், தேர்தல் அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரது தொலைபேசிகளை மத்திய அரசு உளவு பார்த்ததாக சர்ச்சை எழுந்தது.. பொதுவாக தீவிரவாதம் உள்ளிட்டவற்றை அடக்குவதற்காக அரசுகளுக்கு மட்டும்தான் அந்த நிறுவனமானது தகவல்களை வழங்குவார்கள்..

ஆனால் இந்தியாவில் பத்திரிக்கையாளர் உள்ளிட்ட பலரது அலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டது. மத்திய அரசுக்கு தெரிந்து தான் நடந்தது என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்னெடுத்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் இந்து என். ராம் உள்ளிட்டோர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி ரமணா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு முன்னதாக உத்தரவிட்டது நீதிமன்றம்..

இந்த நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு விரிவாக விசாரிக்கப்படும். அதற்கு முன்பு எத்தகைய மென்பொருள்கள் இந்த விவகாரத்தில் பயன்படுத்தப்பட்டது உள்ளிட்ட விவரங்களை வெளியிட முடியாது.

குறிப்பிட்ட மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா? என்பதை பொதுவெளியில் விவாதிக்க முடியாது. பெகாசஸ் விவகாரத்தில் கூடுதலாக பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யப்போவதில்லை. பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு எதையும் மறைக்கவில்லை என்று கூறப்பட்டது..

இதையடுத்து நீதிமன்றம், மத்திய அரசின் நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்ள வாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.. ஆனால் மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை.. ஆகவே மனுதாரர்களை விசாரித்து இந்த வழக்கில் உத்தரவை பிறப்பிக்க போவதாக தெரிவித்தது.

 

Categories

Tech |