Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தனியார் நிறுவன ஊழியர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எர்ரப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் சின்னராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ரவிச்சந்திரன் என்ற மகன் இருந்தார். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் விடுமுறை என்பதால் ரவிச்சந்திரன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இதனையடுத்து ரவிச்சந்திரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிச்சந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வாலிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |