அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பார்டர் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது சினம், அக்னி சிறகுகள், பார்டர், பாக்ஸர், யானை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பார்டர் படத்தை அறிவழகன் இயக்கியுள்ளார். ஏற்கனவே அருண்விஜய்- அறிவழகன் கூட்டணியில் வெளியான குற்றம் 23 படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள பார்டர் படத்தில் ஸ்டெபி படேல் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ரெஜினா கெஸன்ட்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பார்டர் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.