சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தற்போது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.. அலுவல் சாரா உறுப்பினராக மூன்றாண்டுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்..
இதேபோல கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக எம்எல்ஏக்களான ஈஸ்வரன், கணேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.. அண்ணாமலை பல்கலை கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக விசிகவின் சிந்தனை செல்வன் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்..