மற்றவர்கள் வியந்து பார்க்க கூடிய அளவிற்கு நேர்மையான எண்ணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே..!! இன்று அல்லல்கள் தீர்ந்து ஆனந்தம் பெருகும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் நன்மை கிட்டும். வெளியூர் பயணங்களின்போது பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். உடல் ரீதியாக உபாதைகள் கொஞ்சம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் செல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது செல்வதன் மூலம் மன அமைதி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும்.
கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். இன்று செலவுகள் கூடும் நாளாகவே இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஓரளவு முன்னேற்றத்தை பெறக்கூடும். சகமாணவர்களிடம் நீங்கள் அனுசரித்து செல்லுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்