Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கண்பார்வை சரியா தெரியல…. மூதாட்டியின் விபரீத முடிவு…. தூத்துக்குடியில் சோகம்….!!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டார்மடம் சிவன்குடியேற்று வடக்கு தெருவில் மூதாட்டி செல்வபூரணம் வசித்து வந்தார். இவர் கண் அறுவை சிகிச்சை செய்தும் கண்பார்வை சரியாக தெரியவில்லை. இதனால் மனமுடைந்த மூதாட்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டி செல்வபூரணத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவரது உறவினர் செல்வகுமார் கொடுத்த புகாரின்படி சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் பவுலோஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Categories

Tech |