Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும்”…சொத்து பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும்..!!

மற்றவர்கள் பார்வையில் ஒரு வித்தியாசமான கோணத்தை அணுகக்கூடிய விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று பயணத்தால் உங்களுக்கு பலன் கிடைக்கும்.. தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். தொழிலில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரக்கூடும். இன்று திடீர் கோபம் வேகம் மட்டும் இருக்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடும். ஆகையால் எதிலும் பொறுமையாக செயல்படுங்கள்.

எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இன்று இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். பயணம் மூலம் ஓரளவு சாதகமான சூழல் இருக்கும். கடின போக்குவரத்து நன்மை கொடுப்பதாக இருக்கும். மாணவர்கள் இன்று கல்வியில் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களை படிப்பது நல்லது. பாடங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான  காரியத்தில் ஈடுபடும் பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். ஓரளவு வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். அது போலவே காலையில் நீங்கள் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால் இன்று நாம் எடுக்கக்கூடிய காரியங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான  திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |