Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தடுப்பூசி செலுத்திய பெண்கள்…. குலுக்கல் முறையில் பரிசு…. அதிகாரியின் தகவல்….!!

கொரோனா தடுப்பூசி செலுத்திய 24 பெண்களுக்கு குலுக்கல் முறையில் சேலை பரிசாக வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் நகரபஞ்சாயத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இந்து தொடக்கப்பள்ளி, செந்தில் முருகன் நடுநிலைப்பள்ளி, டி.டி.டிஏ. தொடக்கப்பள்ளி, தோப்பூர் அரசு ஆரம்பப்பள்ளி, அமலிநகர் ஆர்.சி. ஆரம்பப்பள்ளி, ஆலந்தலை கார்மேல் நடுநிலைப்பள்ளி போன்ற 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்கு முன்பாக நகரபஞ்சாயத்து சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2 நாட்களாக ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் முகாம்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இவ்வாறு தடுப்பூசி செலுத்தி கொண்ட பொதுமக்களுக்கு நகர பஞ்சாயத்து சார்பாக 2 மணி நேரத்திற்கு ஒரு முறை குலுக்கல் முறையில் பரிசு கொடுக்கப்பட்டது. இவற்றில் 24 பெண்களுக்கு நகரபஞ்சாயத்து செயல் அலுவலர் இப்ராஹீம்ஷா சேலைகளை பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன், நகரப்பஞ்சாயத்து பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |