சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளுவாடி கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட பொன்மலை என்ற மகன் இருந்துள்ளார். அந்த சிறுவன் அரசு நடுநிலை பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பொன்மலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்மலையின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.