Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஸ்மார்ட் சிட்டி திட்டம்” 28 கோடி ரூபாய் செலவில் ஸ்டெம் பூங்கா…. அடிக்கல் நாட்டிய அமைச்சர்….!!

28 கோடி ரூபாய் செலவில் அமைக்க இருக்கும் ஸ்டெம் பூங்காவை அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பூங்காக்கள், நவீன வாகன நிறுத்துமிடம், ஸ்மார்ட் சாலைகள், பேருந்து நிறுத்தம் மேம்பாடு என பல்வேறு பணிகள் நடைபெறுகிறது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் பிரம்மாண்டமான அறிவியல் பூங்காவை கொண்டுவர மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் 9 ஏக்கர் பரப்பளவில் 28 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் ஸ்டெம் பூங்கா அமைக்க இருக்கிறது. இது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் போன்றவை ஒருங்கிணைந்த “ஸ்டெம் பூங்காவாக இருக்கும். இதில் மினி திரையரங்கம், அறிவியல் மண்டலம், ஆற்றல் மண்டலம், கணித மண்டலம், பொறியியல் மற்றும் பொருள் அறிவியல், விண்வெளி மண்டலம், பரிமாண மாதிரிகள், உட்புற கண்காட்சிகள், ஒரு கோளத்தில் அறிவியல், மெய்நிகர் கண்காட்சி கூடம், கண்டுபிடிப்பு மையம் போன்றவை அமைக்க இருக்கின்றது .

இந்தப் பூங்கா மாணவ-மாணவிகளுக்கு கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைக்கப்படும். மேலும் மாணவர்கள் உட்கார்த்து படிக்கும் வசதி, ஓய்வு அறை, கழிப்பறை, கேன்டீன், வாகன நிறுத்துமிடம் போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படும். இதனையடுத்து சிறுவர் விளையாட்டுப் பூங்காவும் இந்த வளாகத்தில் அமைக்க இருக்கிறது. அதன்பின் மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் தலைமையில், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ முன்னிலையில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைதொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். அப்போது மாநகராட்சி செயற்பொறியாளர் சேர்மக்கனி, உதவி செயற்பொறியாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தப் பணியானது ஒரு வருடத்திற்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |