Categories
அரசியல்

அடடே…! ஆதாரத்தோடு பேசுறாரு…. வீடியோவை காட்டிய எடப்பாடி…. திமுகவை விளாசி பதிலடி …!!!

அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த போது ஆ.ராசா பேசிய வீடியோவை காட்டி எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையியல் இன்று நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது., சட்டப்பேரவை தொடங்கியதும் வெளிநடப்பு செய்த அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஏற்கனவே நீட் தேர்வுக்கு பல விவாதங்கள்  நடைபெற்றிருக்கின்றன. மாண்புமிகு அம்மாவின் அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்திலேயே சட்ட முன்வடிவை நிறைவேற்றி மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பியது.

அதற்குப் பிறகு தேர்தல் வந்துவிட்டது, அதோடு உச்சநீதிமன்றமும் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்து விட்டது. தமிழகத்திலும் தேர்தல் நடைபெற்று விட்டது.இந்த நிலையில் தான் இவர்கள் மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருகிறார்கள்.  இன்றைக்கு தமிழகத்தைத் தவிர மற்ற மாநில முழுவதும் நீட் தேர்வை நடத்துகின்றது.நாம் தாம் நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்து உடனே நீட் தேர்வு பாதிப்பு ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு  தன்னுடைய கருத்தை தெரிவிக்கிறார். இது தொடர்பாக ஒருவர் தனிப்பட்ட முறையிலே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார். அந்த வழக்குக்கு பதில் அளித்த தமிழக அரசு என்ன சொல்கிறார்கள் என்று சொன்னால்….  உச்சநீதிமன்றத்திற்கு எதிராகவும், மத்திய அரசு கொண்டு வந்த எந்த சட்டத்திற்கு எதிராக நாங்கள் இதை அமல்படுத்தவில்லை அப்படி என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.

நீட் தேர்வை  ரத்து செய்வோம் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை ஆக என்றே திட்டமிட்டு மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்றிய அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசு. அதுமட்டுமல்ல அன்றைக்கு நாங்கள் நீட்டுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தபோது திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜா அவர்கள் ஒரு கருத்தை தெரிவித்தார்.

நீட்டை ரத்து செய்வதற்கு சாத்தியமே இல்லை.  அப்புறம் எதுக்கு தீர்மானம் போட்டு.. யாரை ஏமாற்றுவதற்கு… முடியாத ஒரு காரியத்தை செய்வது சாத்தியம் இல்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா பேசிய விடியோவை பத்திரிக்கையாளர் சந்திப்பில் காட்டியா எடப்பாடி பழனிசாமி,

அன்றைய தினம் நாங்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டுவந்தபோது அயோக்கியத்தனம் என்று அப்போது இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தார். இப்போது அந்தத் தீர்மானத்தை திமுக கொண்டு வந்து இருக்கின்றது. இது இவர்களுக்கு பொருந்துமா என்பதை நான் கேட்க விரும்புகின்றேன் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Categories

Tech |