பொறுமையின் சிகரமாக திகழும் மீனராசி அன்பர்களே..!! இன்று அனைவரையும் அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயத்தை காணும் நாளாக இருக்கும். குடும்ப சுமை மட்டும் கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியம் சீராக ஆதாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். விரயங்கள் கூடுதலாகவே ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. இன்று தடைபட்டுக் கொண்டிருந்த காரியங்கள் சிறப்பாகவே நடைபெறும். பணவரவும் உங்களுக்கு கையில் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தை மீண்டும் ஒருமுறை பேணிப் பாதுகாத்திடுங்கள். வீண் பகை உண்டாகலாம். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. வாகனம் மூலம் செலவுகள் கொஞ்சம் இருக்கும். பயணம் சுகம் கிடைக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். உறவினர் வருகை இருப்பதால் மனதில் கவலை தோன்றாது.
செலவுகள் மட்டும் இருக்கும். அதனால் பார்த்து அதற்கு ஏற்றார்போல் செய்வது நல்லது. தேவையில்லாத பொருட்களை தயவுசெய்து வாங்க வேண்டாம். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியரின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். சக மாணவரிடம் கொஞ்சம் ஒற்றுமையாக பேசுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்தை செய்யும்போது நீல நிற ஆடையில் செல்லுங்கள் அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். காரிய வெற்றி ஏற்படும். அதிகாலையில் விநாயகரை நீங்கள் மனதார நினைத்து வழிபட்டு தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்