பஸ்சில் பெண்ணிடம் மர்ம நபர் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் ரோசிலி என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருப்பூருக்கு வந்தார். இதனையடுத்து கண்டியன்கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ரோசிலி பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தில் பயணம் செய்தார். இந்நிலையில் அரசு பேருந்து தெற்கு காவல் நிலையம் அருகில் வந்தபோது ரோசிலியின் கைப்பையில் வைத்திருந்த 1 1/2 பவுன் நகை காணாமல் போய்விட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த ரோசிலியின் சத்தம் கேட்டு டிரைவர் பேருந்தை காவல் நிலையம் அருகில் நிறுத்தினார். அதன்பின் அரசு பேருந்தில் பயணம் செய்த சக பயணிகள் 70 நபரிடம் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். ஆனால் நகை சக பயணிகளிடம் இல்லாததால் ரோசிலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைதொடர்ந்து அரசு பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.