பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கரூர் மாவட்டத்தில் உள்ள காருடையாம்பாளையம்- காளி பாளையத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மோளப்பாளையம் பகுதியில் பழைய பஞ்சு அரைக்கும் ஆலை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது பஞ்சு ஆலைக்கு அருகே உள்ள குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு குடோனில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். அந்த சமயம் ஆலையில் பணியாளர்கள் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.