நாளைய பஞ்சாங்கம்
14-09-2021, ஆவணி 29, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி பகல் 01.09 வரை பின்பு வளர்பிறை நவமி.
கேட்டை நட்சத்திரம் காலை 07.04 வரை பின்பு மூலம் நட்சத்திரம் பின்இரவு 05.55 வரை பின்பு பூராடம்.
மரணயோகம் காலை 07.04 வரை பின்பு அமிர்தயோகம் பின்இரவு 05.55 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 1.
ஜீவன் – 1/2.
ஆவணி மூலம்.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
நாளைய ராசிப்பலன் – 14.09.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நண்பர்களின் உதவி கிட்டும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன சங்கடங்கள் உண்டாகும். உடல் நிலை மந்தமாக இருக்கும். வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு தனவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினை குறையும். சுபகாரியங்கள் கைகூடும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது நல்லது. உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பணப்பிரச்சினை குறையும்.
துலாம்
உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். தடைப்பட்ட காரியம் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்புகள் அமையும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் ரீதியான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
தனுசு
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
மகரம்
உங்களின் ராசிக்கு பண வரவு சற்று சுமாராக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். நீங்கள் செய்யும் சிறு செயல்கள் கூட தாமதமாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும். பொன் பொருள் சேரும்.
மீனம்
உங்களின் ராசிக்கு உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள்.