Categories
உலக செய்திகள்

நாடு திரும்பிய பெண்மணி…. பெட்டியினுள் இருந்த உயிரி…. 24 மணிநேர விமான பயணம்….!!

சுமார் 4,000 கிலோ மீட்டர் தொலை தூரத்திலுள்ள தீவிலிருந்து பல்லி ஒன்று 24 மணி நேரம் விமானத்தின் மூலம் இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் செய்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் லிசா என்னும் பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் பார்படோஸ் என்னும் தீவிற்கு சென்று விட்டு சுமார் 4,000 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் தனது நாட்டிற்கு விமானத்தின் மூலம் பயணம் செய்து வீடு திரும்பியுள்ளார்.

இதனையடுத்து வீடு திரும்பிய லிசா பார்படோஸ் தீவிலிருந்து தனது நாட்டிற்கு கொண்டு வந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதாவது அவர் கொண்டுவந்த பெட்டியினுள் இருந்த ஆடையில் பல்லி ஒன்று இருந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த லிசா முதலில் அது இறந்துவிட்டதாக நினைத்துள்ளார். அதன் பின்பு பெட்டியினுள் இருந்த பல்லி மெது மெதுவாக நகரத் தொடங்கியுள்ளது. இதனை லிசா ஊர்வன காப்பாளர்களிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளார்.

Categories

Tech |