மும்பையில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மும்பை புறநகர் அந்தேரியில், சகி நாகா என்ற பகுதியில் ஒரு இளம்பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்தப் பெண்ணிற்கு வயது 30. உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்கும் அவரை காவல்துறையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிலர் கூட்டாக சேர்ந்து அவரை கற்பழித்து உள்ளதாக தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். அவருடைய பிறப்பு உறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கொடூரமாக சித்திரவதை செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு டெம்போ வாகனத்தில் அரங்கேறியுள்ளது. அந்த வாகனத்துக்குள் ரத்தக்கறை படிந்திருந்தது. பெண் சித்திரவதை செய்யப்படுவதை பார்த்து யாரோ ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மோகன் சவுகான் ஆகும். இந்நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரு இளம்பெண்ணை கொடூரமாக கற்பழித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை போலீஸ் உதவி கமிஷனர் ஜோட்சனா ராசம் தலைமையிலான சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தேசிய மகளிர் ஆணைய குழுவினர் ஐந்து பேர் சாக்கிநாக்கா பகுதியில் உள்ள பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். மேலும் குற்றச் செயல் நடந்த டெம்போவில் ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து அவர்கள் பெண் 36 மணி நேரம் சிகிச்சை பெற்ற ராஜபாளையம் மருத்துவமனைக்கும் சென்று பெண்ணிற்கு ஏற்பட்ட காயங்கள், அளிக்கப்பட்ட சிகிச்சை உள்ளிட்ட விவரங்களையும் கேட்டுள்ளனர். தொடர்ந்து மகளிர் ஆணையத்தினர் மாநில டிஜிபியும் சந்தித்து பேச உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.