உயர்கல்வியை கற்கும் பெண்கள் கட்டாயமாக இஸ்லாமிய உடையை அணிந்திருக்க வேண்டும் என்று ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களால் உருவாக்கப்பட்ட தற்போதைய ஆட்சியின் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இவர்கள் நாட்டிலுள்ள பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் தலிபான்களால் உருவாக்கப்பட்ட புதிய ஆட்சியின் கல்வித் துறை அமைச்சர் ஒரு முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது பெண்கள் உயர் கல்வியை கற்கும் போது கட்டாயமாக இஸ்லாமிய உடையை போட்டிருக்க வேண்டும் என்பதாகும்.
மேலும் வகுப்பறையில் ஆண், பெண் இருவரும் ஒன்றாக சேர்ந்து இருக்காமல் தனித்தனியான வகுப்பறையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.