தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை பகுதியில் ரமேஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் ரமேஸ் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாளையங்கோட்டை காவல்துறையினர் அங்கு தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.
அந்த சோதனையில் 3 நம்பர் லாட்டரி மற்றும் தடைசெய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் வைத்து ரமேஷ் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ரமேசை கைது செய்ததோடு அவரிடம் இருந்து ரூ.4,500 மற்றும் லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.