ஏரியில் முழ்கி எலக்ட்ரிஷன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சம்பந்தம் நகர் மூன்றாவது பகுதியில் பாரதிராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது 2 மகன்களுடன் விநாயகர் சிலையை கரைக்க ஏரிக்கு சென்றுள்ளார். அப்போது ஏரியில் விநாயகர் சிலையை கரைத்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென நிலைதடுமாறி தண்ணீரின் உள்ளே விழுந்துள்ளார். இதனை கண்டு 2 மகன்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்க முயற்சி செய்த நிலையில் காப்பாற்ற முடியாமல் பாரதிராஜா ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த பாரதிராஜாவை சடலமாக மீட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.