தாலியை கழற்றி வைத்து விட்டு இளம்பெண் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பனமுகை கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு விவசாயியான சதீஷ் என்கிற மகன் இருக்கின்றார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் பூங்கொடி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதியன்று பூங்கொடி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அதன் பிறகு மறுநாள் காலையில் பூங்குடி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் தாலியை கழற்றி வைத்து விட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பூங்கொடியை தீவிரமாக தேடி வருகின்றனர்.