பிரதமருக்கு அனுப்பப்பட்ட பார்சலை சிறப்பு படைகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து பிரதமரான ஜெசிந்தா ஆர்டர்னுக்கு மர்ம பார்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அவர் அலுவலகத்தின் ஒன்பதாவது மாடியில் பணிபுரிந்து கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது ஜெசிந்தாவின் அலுவலகத்தின் கீழே அதாவது எட்டாவது மாடியில் பணிபுரியும் அலுவலகர் ஒருவர் அந்த பார்சலை வாங்கியுள்ளார். அதனை பிரித்து பார்த்த பொழுது உள்ளே வெள்ளை நிற பொடி இருந்துள்ளது. இது குறித்து உடனே பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மூன்று சிறப்பு குழுக்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் அந்த பார்சலை ஆய்வு செய்யும் பணியில் இறக்கப்பட்டுள்ளனர். இதே போன்று அண்மையில் இலங்கையர் ஒருவர் கத்திக்குத்து நடத்திய சம்பவம் அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிறைஸ்ட்சர்ச் விமான நிலையத்தில் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பிரதமருக்கு பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து நிகழும் அசம்பாவிதங்களால் நியூசிலாந்தில் அனைவரும் பீதியடைந்துள்ளனர்.