16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கழுகுன்றம் தாலுகாவில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் சங்கராபுரம் பகுதியில் இருக்கும் டெய்லரிங் பள்ளியில் படித்து வருகிறார். இதனால் அதே பகுதியில் இருக்கும் தனது பெரியப்பா மகள் பொன்னி என்பவரது வீட்டிற்கு வந்து தங்கி இருந்துள்ளார். இதனையடுத்து பொன்னியின் கணவரான மோகன் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதன்பின் கணவனின் செயலுக்கு மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த கணவனுக்கு உடந்தையாக இருந்த மனைவியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் தப்பிச்சென்ற மோகனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.