Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தினமும் பெற்றோரிடம் தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருமணம் செய்து வைக்காத காரணத்தினால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியதுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் சலவைத் தொழிலாளி குடியிருப்பு பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தினமும் மது அருந்திவிட்டு வந்து பெற்றோர்களிடம் திருமணம் செய்து வைக்குமாறு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன்பின் தகராறில் ஈடுபட்டு விட்டு அறையினுள் சென்று தூங்கிய ஆறுமுகம் காலையில் ரொம்ப நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்துள்ளனர்.

பின்னர் ஆறுமுகம் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததை கண்டு பெற்றோர்கள் கதறி அழுதுள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |