விருச்சிகம் ராசி அன்பர்களே.! நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும்.
இன்று இஷ்ட தெய்வ அருளால் நன்மை உண்டாகும் நாளாக இருக்கும். நண்பர்களிடம் ரொம்ப அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். இயற்கை சூழ்நிலையுடன் ஒத்துப் போவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் நாட்டம் செல்லும். ஜோதிடம் கற்றுக் கொள்ளலாமா என்ற எண்ணங்கள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி வியப்பூட்டும் வகையில் இருக்கும். மனைவி விரும்பிக் கேட்ட பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள். குடும்பத் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். இன்னும் கவனமாக இருந்து சிறப்பை வெளிப்படுத்துவீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். சில்லரை சண்டைகளை சரி செய்து கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் திறமை இருக்கும். தொழில் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் சரியாகிவிடும். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும்.
நிதிஉதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். பொருட்கள் எல்லாம் சேரும். கையில் காசு பணம் புரளும். காதல் விவகாரங்கள் பிரச்சினையைக் கொடுக்கும். மாலை நேரத்துக்கு பின்னர் சரியாகும். நீங்கள் புரிந்து கொண்டு பக்குவமாக செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை இருக்கும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு