8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்)கால்பந்து போட்டிக்கான முதற்கட்ட அட்டவணையை போட்டி அமைப்புக் குழு நேற்று அறிவித்தது.
11 அணிகள் கொண்ட 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி வருகின்ற நவம்பர் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது .இப்போட்டி கோவாவில் உள்ள மூன்று மைதானங்களில் நடைபெறுகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான்-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகிறது .
மொத்தமாக 115 ஆட்டங்களில் தற்போது முதற்கட்டமாக 55 ஆட்டங்களுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது .மீதமுள்ள போட்டிக்கான அட்டவணை வருகின்ற டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சனிக்கிழமை மட்டும் இரண்டு போட்டிகள் நடக்க இருக்கிறது. இதில் முதல் ஆட்டம் இரவு 7.30 மணிக்கும், இரண்டாவது ஆட்டம் இரவு 9.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.