Categories
உலக செய்திகள்

துணை பிரதமர் மறைவா….? மறுப்பு தெரிவித்துள்ள தலீபான்கள்…. வெளியிடப்பட்ட தவறான தகவல்கள்….!!

தலீபான்களின் முக்கிய தலைவரும் துணை பிரதமருமான முல்லா அப்துல் கனி பரதர் இறந்துவிட்டதாக தவறான தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தற்பொழுது இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். அதில் முல்லா அப்துல் கனி பரதருக்கு துணை பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தலீபான்களின் துணை பிரதமரான முல்லா அப்துல் கனி பரதருக்கு ஹக்கானி அமைப்பினருக்கும் இடையே அதிபர் போட்டியின் காரணமாக மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் துணை பிரதமரான முல்லா கருத்து வேறுபாடு காரணமாக அவரது அமைப்பினரான தலீபான்களாலேயே கொலை செய்யப்பட்டார் என்று தகவல்கள் வெளியானது. இந்த கருத்தினை மறுத்து முல்லாவே தான் நலமாக இருப்பதாக குரல் பதிவு ஒன்றையும் அவர் கைப்பட எழுதிய கடிதத்தையும் வெளியிட்டார்.

 

குறிப்பாக ஊடகங்கள் வெளியிடும் தவறான தகவல்கள் தலீபான்கள் அமைப்பில் இருந்தும் முல்லாவின் ஆதரவாளர்கள் தரப்பில் இருந்தும் மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தங்களுக்கிடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் முல்லா அப்துல் கனி பரதர் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் முக்கிய தலைவர்களின் தரப்பிலிருந்தும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து தலீபான்கள் புதிய அரசாங்கம் குறித்து கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இதனை தொடர்ந்து முல்லா துணை பிரதமராக அறிவிக்கப்பட்ட பின்னர் தான் பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அவருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிலும் தலீபான்கள் நிறுவன குழுவிற்கும் ஹக்கானி அமைப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் முக்கிய பொறுப்பில் இருந்து முல்லா வெளியேறினார் என்றும் கூறப்பட்டது. இதன் பின்னர் தலீபான்கள் ஆப்கானை கைப்பற்றிய பின்னர் முதன் முறையாக கத்தார் நாட்டில் இருந்து வெளிவிவகார அமைச்சர் உட்பட பல முக்கிய அதிகாரிகள் காபூல் நகருக்கு வருகை புரிந்தனர். அந்த சந்திப்பில் முல்லா அப்துல் கனி பரதர் பங்கேற்கவில்லை. இதனால் அவர் உயிருடன் இருக்கிறாரா என்ற சந்தேகம் கிளம்பியது. மேலும் ஹக்கானி அமைப்பின் மூவர் ஆப்கான் அமைச்சர்களுடன் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். இதன் காரணமாகவும் முல்லா அப்துல் கனி பரதர் மீதான சந்தேகம் மேலும் அதிகரித்தது.

Taliban chief Mullah Omar dead, declares Afghanistan government | India.com

குறிப்பாக முல்லா அப்துல் கனி பரதர் தலீபான்களின் மூத்த தலைவர் மட்டுமின்றி இந்த அமைப்பின் முதல் உச்ச தலைவரான முல்லா உமருக்கு துணை தலைவராக பணி புரிந்தவர். அதிலும்  2013 ஆம் ஆண்டு காசநோய் காரணமாக முல்லா உமர் இறந்ததை அடுத்து தலீபான்களின் அரசியல் பிரிவின் தலைவராக பொறுப்பேற்றார். இவர் எப்பொழுதும் ஹக்கானி அமைப்பினருடன் கருத்து வேறுபாடுடன் இருந்து வருகிறார். ஏனெனில் தலீபான்களின் எதிரியாக கருதப்படும் ஐ.எஸ் கோராசான் பிரிவுடன் ஹக்கானி அமைப்பினர் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளனர். மேலும் அண்மையில் காபூல் விமான நிலையத்தில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலானது ஹக்கானி அமைப்பினரின் தூண்டுதலால் தான் ஐ.எஸ் கோராசான் பிரிவினர் நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |