தமிழகத்தில் கூடுதலாக 50லட்சம் தடுப்பூசிகள் வழங்ககோரி சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழகத்தில் தடுப்பூசி முகாம்கடந்த 2தினங்களுக்கு முன்பு நடந்தது. அதில் முகாம் அமைக்க தேவையான அளவு தடுப்பூசி வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் பெரிய அளவில் வெற்றி பெற்றது . இந்த முகாமில் 28.1 ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர் . தமிழகத்தில் கூடுதலாக 50லட்சம் தடுப்பூசி , 3 கோடியே 81 லட்சத்து 41 ஆயிரத்து 820 தடுப்பூசி மருந்துகளும்,1.93 கோடி ஊசிகளும், மத்திய அரசு வழங்கியது. தமிழகத்தில் தொடர்ந்து இன்னும் கூடுதலான தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் மக்கள் தொகையை கணக்கிட்டு தடுப்பூசிகள் போட வேண்டியுள்ளது. தமிழகத்தில் வாரத்தில் 6 நாட்களும் தலா 5 லட்சம் பேருக்கு, ஞாயிற்றுக்கிழமை அன்று மெகா தடுப்பூசி முகாமை நடத்தி 20 லட்சம் பேருக்கும், வாரத்துக்கு 50 லட்ச பேருக்கும், தடுப்பூசிகள் போட முடியும் என்று திட்டமிடப்பட்டுள்ளது . அதற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அதன் மூலமாக வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி போட முடியும் என்றும் அதனால் தமிழகத்திற்கு மேலும் கூடுதலாக 50 லட்சம் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டுமென மத்திய அரசிற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
Categories