அறநிலையத்துறை சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்..
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.. அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருச்செந்தூர் கோயிலில் வரும் 16ம் தேதியிலிருந்து காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். அன்னதான திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். அறநிலையத்துறை சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.. கோவில்களில் காது குத்துவதற்கு முறைகேடாக அதிக பணம் வசூலிப்பது குறித்து விசாரிக்க துறை ரீதியான குழு அமைக்கப்படும் என்றார்..