Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 17 ஆம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்….. அமைச்சர் மா.சுப்ரமணியன்…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம் களில் 28.5 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 20 லட்சம் தடுப்பூசி செலுத்துவதற்கு தமிழக அரசு இலக்கு நிர்ணயித்த நிலையில், அதனையும் தாண்டி தடுப்பூசி செலுத்தி தமிழக அரசு புதிய சாதனையைப் படைத்தது. மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இதனைப் போலவே ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் வருகின்ற 17 ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

Categories

Tech |