Categories
மாநில செய்திகள்

BREAKING: 5,570 வழக்குகள் ரத்து…. தமிழக அரசு அரசாணை……!!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. அந்தக் கூட்டத் தொடரில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மற்றும் சட்ட திருத்த சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில் குடியுரிமை திருத்த சட்டம், எட்டு வழி சாலை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைப் போலவே கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் பத்திரிகையாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்குகள் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி அவர்களின் வழக்குகள் என மொத்தம் 5,570 வழக்குகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |