பிரிட்டனில் உணவு விற்பனை செய்பவராக நடித்து இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனின் மெட்ரோ காவல்துறையினர், தங்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்கள். அதில், உணவு விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தின் பெயர் கொண்ட உடை அணிந்திருந்த இளைஞரை கைது செய்திருந்தனர். அதன் பின்பு அது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், கடந்த சனிக்கிழமை அன்று லண்டனில் உள்ள Shoreditch என்ற தெருவில் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் உணவு விற்கும் பிரபல நிறுவனத்தின் உடையை அணிந்து கொண்டு ஒரு பையை வைத்துக் கொண்டு பைக்கில் வந்திருக்கிறார். அப்போது காவல்துறையினருக்கு அந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
This fake take away delivery rider was nicked over night whilst riding through #shoreditch on route to drop off an order. Currently enjoying one our fine en-suites. @MPSHackney @MPSTowerHam pic.twitter.com/0EMWkBT3v8
— MPSSpecials (@MPSSpecials) September 11, 2021
எனவே, அவரை நிறுத்தி அவரிடம் விசாரித்துள்ளார்கள். ஆனால் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் செல்வதிலேயே குறியாக இருந்திருக்கிறார். மேலும் அவர் கொண்டுவந்த பையினுள் கஞ்சா வாசனை வந்திருக்கிறது. இதனால் காவல்துறையினர் உடனடியாக அந்தப் பையை திறந்திருக்கிறார்கள். அதில் பணமும், கஞ்சாவும் இருந்திருக்கிறது. அதன் பின்பு அந்த இளைஞரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 520 பவுண்டு பணத்தை மீட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.