Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BREAKING: நடிகர் சூரி வீட்டில் நகை திருடியவர் கைது…!!!

நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண நிகழ்ச்சியானது மதுரை சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் வேலம்மாள் மருத்துவமனைக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்காக நடிகர் சூரி உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் திருமண விழாவிற்கு வந்திருந்தனர். இதில் சிவகார்த்திகேயனும் கலந்துகொண்டார். இந்நிலையில் மர்ம நபர் யாரோ மணமகள் அறைக்குள் புகுந்து அங்கிருந்த 10 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து திருமண மண்டபம் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்  அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வந்த நிலையில், விக்னேஷ் என்பவர் நகையை திருடியது தெரியவந்துள்ளது.  இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 10 சவரன் நகையை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |