ஐபிஎல் தொடரின் 2-வது பாதி ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ள மாற்று வீரர்கள் குறித்து கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
14-வது சீசன் ஐபிஎல் தொடரின் 2-வது பாதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஆர்சிபி அணியில் விளையாடி வந்த கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, டேனியல் சாம்ஸ், ஜாஃப்ரா பின் ஆலன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 2-வது பாதி ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளனர் . இதனால் இவர்களுக்கு பதிலாக ஜார்ஜ் கார்ட்டன், வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, டிம் டேவிட், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இங்கிலாந்தில் இருந்து துபாய்க்கு வந்துள்ள ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி தனிமைப்படுத்துதல் முடிந்தபிறகு அணியுடன் இணைய உள்ளார். இந்நிலையில் அணியில் மாற்று வீரர்கள் குறித்து விராட் கோலி கூறும்போது,” நான் ஒவ்வொருவருடனும் தொடர்பில் இருந்தேன். கடந்த மாதம் அணியில் இருந்து யார் வெளியேறுகிறார்கள் , புதிதாக யார் அணியில் இணைகிறார்கள் என்பது தொடர்பாக நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.
எங்கள் அணியில் முக்கிய வீரர்கள் வெளியேறியதால், தரம் வாய்ந்த மாற்று வீரர்களை தேர்வு செய்துள்ளோம் .அத்துடன் முக்கிய வீரர்களை தவறவிடுகிறோம் என்றும் ,அவர்கள் எங்கள் ஆர்சிபி குடும்பத்தின் ஒரு பகுதி “என்று கூறினார் .மேலும் பேசிய அவர் “புதிதாக அணியின் இணைந்திருப்பவர்கள் சிறந்த திறன் கொண்டவர்கள் .குறிப்பாக இங்குள்ள சூழ்நிலைக்கு சிறப்பாக செயல்படக் கூடியவர்கள் .அவர்கள் மொத்த அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வதை பார்க்க ஆர்வமுடன் இருக்கிறேன் .அதேபோல முதற்பகுதி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதை போன்று 2-வது பகுதியிலும் சிறப்பான ஆட்டத்தை தொடங்க ஆர்வமாக இருக்கிறேன் “என்று அவர் கூறினார்.