நடிகர் வடிவேலு புதிதாக நடிக்க உள்ள படத்தில் பிரியா பவானி ஷங்கர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர் வைபவ் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இதை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது பிரியா பவானி ஷங்கர் ஓமணப் பெண்ணே, ருத்ரன், ஹாஸ்டல், யானை, திருச்சிற்றம்பலம், குருதி ஆட்டம், பொம்மை, பத்து தல போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
மேலும் இவர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன்-2 படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் வடிவேலு புதிதாக நடிக்கும் படத்தில் பிரியா பவானி சங்கர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை சுராஜ் இயக்குகிறார் . விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.