வெள்ளகோவிலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சேதமடைந்து காணப்படுவதால் அதனை புதுப்பித்து தர வேண்டி தன்னார்வ அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கின்றது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வெள்ளகோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் சென்று பயன்பெறுகின்றனர்.
எனவே தற்போது கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு மட்டுமே செல்ல வேண்டிய நிலை இருக்கின்றது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேதமடைந்து காணப்படும் கட்டிடத்தை சீரமைத்து அல்லது முற்றிலும் அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என தன்னார்வ அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.