Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானிற்கு 20 மில்லியன் டாலர்கள் நிதி.. ஐ.நா சபை அறிவிப்பு..!!

ஐ.நா சபை, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு 20 மில்லியன் டாலர்கள் அளிக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் நாடு, வறுமை மற்றும் போர் காரணமாக கடும் பாதிப்படைந்துள்ளது. எனவே அந்நாட்டு மக்களுக்கு உதவ ஐ.நாவின் மத்திய அவசரகால உதவிக்கான நிதியிலிருந்து சுமார் 20 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐ.நா சபை, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்த வருடம் மட்டும் 606 மில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

அதனை, அந்நாட்டிற்கு கொடுத்து உதவ உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று கோரியுள்ளது.  ஐநாவின் பொதுச் செயலாளரான, அன்டோனியோ குட்டெரஸ் தலைமையில் உயர்நிலை நன்கொடையாளர்கள் மாநாடு நடந்தபோது, இவ்வாறு கோரப்பட்டுள்ளது. நீண்டகாலமாக வறுமை மற்றும் வன்முறையை சந்தித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, சமீபத்தில் ஏற்பட்ட மாற்றம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டின் மூலம் கிடைக்கும் நிதியின் அதிகமான பங்கு, ஐநாவின் உலக உணவுத் திட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்றும் ஐநா அறிவித்துள்ளது.

Categories

Tech |