ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி தொடரை சமன் செய்தது .
ஜிம்பாப்வே – அயர்லாந்து அணிகளுக்கிடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது . இதில் முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 34 ஓவர்களில் 134 ரன்களில் சுருண்டது. இதையடுத்து டக்வொர்த் விதிப்படி அயர்லாந்து அணிக்கு 32 ஓவரில் 118 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது .அதன்படி களமிறங்கிய அணி அயர்லாந்து 22.2 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது .இதில் இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் அயர்லாந்து அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.