Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடிக்கடி வீட்டில் சண்டை…. தொழிலாளி எடுத்த முடிவு…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரி காந்திநகரில் மகேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஜோதி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 1/2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இதில் மகேஷ் பலரிடம் கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. மேலும் மகேஷிக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மகேஷ் மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ் உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின் மேல்சிகிச்சைக்காக மகேஷ் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Categories

Tech |