Categories
உலக செய்திகள்

தலிபான்களின் அட்டகாசம்…. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தீவிரவாதிகள்…. எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை….!!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் இந்தியாவைச் சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்களை சிறையிலிருந்து விடுதலை செய்துள்ளதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் மிகவும் கவனமாக இருக்கும்படி இந்திய நாட்டின் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். அதோடு மட்டுமின்றி தலிபான்களின் அட்டகாசத்தின் விளைவாக சிறையிலிருந்த ஐ.எஸ் தீவிரவாத படையினர் அனைவரும் வெளியே வந்துள்ளார்கள்.

இதற்கிடையே இந்தியாவைச் சேர்ந்த 25 ஐ.எஸ் தீவிரவாத ஆதரவாளர்கள் ஆப்கானிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து தலிபான்களின் மேற்குறிப்பிட்டுள்ள செயலால் தற்போது இந்தியாவைச் சேர்ந்த 25 ஐ.எஸ் தீவிரவாத ஆதரவாளர்களும் வெளியே வந்துள்ளார்கள்.

இந்நிலையில் இவர்களால் இந்தியாவிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதால் மத்திய மற்றும் மாநில அரசாங்கம் எச்சரிக்கையாக இருக்கும்படி இந்திய நாட்டின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |