தாய் திட்டியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வி.புத்தூர் கிராமத்தில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா விடுமுறை காரணத்தினால் வீட்டில் இருந்த கோமதியை எந்த வேலையும் செய்யாமல் இருப்பதாகக் கூறி தாய் சரளா திட்டியதாக தெரியவந்துள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த கோமதி வீட்டிலிருக்கும் கழிவறைக்கு சென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து கோமதியின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கோமதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.